நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் நெல்லையப்பர் கோயில், திருநெல்வேலி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பிற சிவன் கோயில்களைப் போன்றே நெல்லையப்பர் கோயிலிலும் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என நான்கு திசைகளிலும் நான்கு வாசல்கள் உண்டு.
முன்னதாக, 2004ஆம் ஆண்டு நெல்லையப்பர் கோயில் வடக்கு புறவாசல் அருகே ஒரு கொலை சம்பவம் ஒன்று அரங்கேறியது. அன்றிலிருந்து பாதுகாப்பு கருதி கோயிலின் வடக்கு, தெற்கு, மேற்கு புற வாசல்கள் மூடப்பட்டன. முக்கியத் திருவிழா நேரங்களில் மட்டும் இந்த மூன்று கதவுகளும் திறக்கப்படும்.
கொண்டாட்டங்கள் நிறைவடைந்ததும், மீண்டும் கதவுகள் மூடப்படும். இவ்வாறு 17 ஆண்டுகளாக மூன்று வாசல் கதவுகளும் பூட்டியே கிடந்தன. அண்மையில் அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு நெல்லையப்பர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார்.
வாசல்கள் திறப்பு
அப்போது பூட்டிக் கிடக்கும் வாசல்கள் விரைவில் திறக்கப்படும் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து, சொன்னதோடு மட்டுமின்றி, உடனடியாக கோயில் வாசல்களைத் திறக்க கோயில் நிர்வாகத்திற்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.