தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 27, 2019, 2:35 PM IST

ETV Bharat / state

சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்: 'சாதிய உள்பிரிவுகளை ஒன்றிணைங்க...!' - போர்க்கொடி உயர்த்தும் நாங்குநேரி வாசிகள்!

திருநெல்வேலி: ஏழு உள்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என வாக்குப்பதிவுக்கு முன்னரே அரசு அறிவித்திட வேண்டும் என நாங்குநேரி தொகுதியில் உள்ள 64 கிராமங்களிலும் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி குறிப்பிட்ட சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

கறுப்புக்கொடி கட்டி போராட்டம்

ஏழு சாதிய உள்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசு அறிவித்திட வேண்டுமென பல ஆண்டுகளாக நாங்குநேரி தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

மக்களவைத் தேர்தலின்போது தூத்துக்குடி மாவட்டம் சங்கராபேரியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஏழு சாதிய பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படுவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் குழுவின் பரிந்துரைப்படி அரசு விரைவில் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் எனவும் உறுதியளித்திருந்தார். ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்தப் பணியும் நடைபெறவில்லை.

எனவே ஏழு உள்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு முன்னர் அரசு அறிவிக்க வேண்டும் என நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட உன்னங்குளம், பெருமாள் நகர், இளையார்குளம் உள்ளிட்ட 64 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தேர்தலுக்கு முன்பாக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்; இல்லையென்றால் இடைத்தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சர்வதேச பயங்கரவாதம் குறித்து விரைவில் மாநாடு - பிரிக்ஸ்

ABOUT THE AUTHOR

...view details