கேரள மாநிலம், மூணாறு நிலச்சரிவில் சிக்கி 50-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள நடுப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நடுப்பிள்ளையார்குளத்தில் உள்ள அவர்களது, குடும்பத்தினரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 14) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இறந்தவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர் மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கவும் ஆட்சியரிடம் அமைச்சர் அறிவுறுத்தியதோடு உயிரிழந்த நபர்களின் குடும்பங்களிக்குத் தலா ரூ.25,000 நிதியுதவியை, தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.
நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரின் நிலை குறித்து முதலமைச்சருக்கு எடுத்துரைத்து தகுந்த நிவாரணம் வழங்கவும்; அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய ஏற்பாடு செய்வதாகவும் குடும்பத்தினரிடம் அமைச்சர் ராஜலட்சுமி உறுதியளித்தார்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினர் சோகத்துடன் காணப்படும் உறவினர்கள் இதையும் படிங்க:எட்டாவது முறையாக கரோனா நிவாரணம் வழங்கிய யாசகர்!