தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையப்பர் கோயில் திருவிழா - சாதி அடையாள கொடியுடன் ஆட்டம் போட்ட சிறுவன் கைது

நெல்லையப்பர் திருக்கோயில் ஆனி விழா தேரோட்டத்தில் சாதி கொடியுடன் ஆட்டம் போட்ட சிறுவனை காவல் துறையினர் கைது செய்தனர்.

சாதி அடையாள கொடியுடன் ஆட்டம் போட்ட சிறுவன் கைது
சாதி அடையாள கொடியுடன் ஆட்டம் போட்ட சிறுவன் கைது

By

Published : Jul 13, 2022, 9:01 PM IST

திருநெல்வேலி:தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான ‘நெல்லையப்பர் திருக்கோயில்’ ஆனிப் பெருந்திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அந்த வகையில் கடந்த 9ஆம் தேதி ஆனி பெருந்திருவிழாவின் தேரோட்டம் நடைபெற்றது.

தேர் திருவிழாவின்போது ஐந்து தேர்கள் நெல்லை நகர் ரதவீதிகளில் வலம் வந்து நிலையம் சேர்க்கப்பட்டது. அப்போது சுவாமி நெல்லையப்பர் கோயில் முன்பு நின்று கொண்டிருந்த முருகன் தேர் மீது ஏறிய இளைஞர் ஒருவர் சமுதாய கொடி ஒன்றை கட்டியதுடன் சமுதாயத் தலைவர்கள் புகைப்படம் பொறிக்கப்பட்ட தனது மேலாடை ஒன்றையும் அதில் வைத்து ஆட்டம் போட்டார்.

சாதி அடையாள கொடியுடன் ஆட்டம் போட்ட சிறுவன் கைது

இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் நெல்லை நகர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் டவுன் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்திய நிலையில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க:1ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - பள்ளி பியூன் போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details