தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூறைக் காற்றில் சிக்கி வெளிநாட்டுப் பறவைகள் உயிரிழப்பு

திருநெல்வேலி: சூறைக்காற்றில் சிக்கிய வெளிநாட்டுப் பறவைகள் உயிரிழந்த சம்பவம் பறவை ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெளிநாட்டுப் பறவைகள் உயிரிழப்பு

By

Published : Apr 30, 2019, 4:56 PM IST

திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு செங்கால்நாரை, கூலக்கடா, அரிவாள்மூக்கன் என 40 வகையான வெளிநாட்டு பறவைகள் ஆயிரக்கணக்கில் ஆண்டுதோறும் இங்குவந்து கூடு கட்டி, குஞ்சு பொறித்து மீண்டும் தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் சென்றுவிடும். இப்பகுதியை தமிழ்நாடு அரசு பறவைகள் சரணாலயமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது.

சூறைக்காற்றில் சிக்கி வெளிநாட்டுப் பறவைகள் உயிரிழப்பு

இந்நிலையில் நேற்று நாங்குநேரி மற்றும் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயப் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காற்றின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் மரத்தின் மேலிருந்த பறவைகள் மற்றும் அவற்றின் குஞ்சுகள் என சுமார் 100க்கும் மேற்பட்ட பறவைகள் கால் மற்றும் குருக்கு எலும்புகள் முறிந்து பலத்த காயமடைந்து உயிரிழந்தன.

இத்தகவலறிந்த வனத்துறையினர், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் பறவைகள் சரணாலயத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பறவைகளை மீட்டு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளித்தனர். மேலும் சூறைக்காற்றில் சிக்கி உயிரிழந்த 100க்கும் மேற்பட்ட பறவைகளை புதைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details