தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நோயாளிகளிடையே நகைச்சுவை விழிப்புணர்வு ஏற்படுத்திய ரோபா சங்கர்

திருநெல்வேலி: அரசு பொறியியல் கல்லூரியில் சிகிச்சைப் பெற்றுவரும் கரோனா நோயாளிகள் மத்தியில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் திண்டுக்கல் சரவணன் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 12) விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

திருநெல்வேலி மாவட்டச் செய்திகள்  கரோனா தொற்று பாதிப்பு  nellai latest news  nellai today news  actor robo sankar  actor robo sankar awareness programme  திண்டுக்கல் சரவணன்  dindigul saravanan awareness programme
கரோனா நோயாளிகளிடையே நகைச்சுவை விழிப்புணர்வு ஏற்படுத்திய ரோபா சங்கர்

By

Published : Aug 12, 2020, 6:45 PM IST

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதால் அவர்களுக்கு நகைச்சுவை நடிகர் மூலம் நகைச்சுவையுடன் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணி இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

இதில், ரோபோ சங்கரும், திண்டுக்கல் சரவணனும் பலகுரலில் பேசி அசத்தினார். தொடர்ந்து ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் உள்ள காவலர்கள், அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். குழந்தைகளிடம் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் ரோபோ சங்கர் கேள்வி கேட்க, குழந்தைகளும் மகிழ்வுடனும், புன்னகையுடன் ஆரவாரமாக பதில் அளித்தனர்.

கரோனா நோயாளிகளிடையே நகைச்சுவை விழிப்புணர்வு ஏற்படுத்திய ரோபா சங்கர்

இதுகுறித்து பேசிய ரோபா சங்கர், "தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தகுந்த இடைவெளியை பின்பற்றி நடத்தினோம். அதைப்பார்த்துவிட்டு பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்று நிகழ்ச்சிகளை நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.

கரோனா நோயாளிகள் மன அழுத்தத்திலிருந்து விடுபடவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்திவருகிறோம். கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த வேண்டுமே தவிர அவர்களை ஒதுக்கக்கூடாது" என்றார்.

இதையும் படிங்க:கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்களை மகிழ்விக்க நகைச்சுவை நிகழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details