திருநெல்வேலி:தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு தலைமையில் மாநகர ஆணையர் அலுவலகத்தில் நெல்லை சரக காவல் துறையினர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நெல்லை மாநகர ஆணையாளர் துரை குமார், நெல்லை சரக டிஐஜி பர்வேஷ் குமார், மாநகர காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சரவணன் (நெல்லை), ஜெயக்குமார் (தூத்துக்குடி), பத்ரி நாராயணன் (கன்னியாகுமரி), கிருஷ்ணராஜ் (தென்காசி) ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நெல்லை சரகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் துறை சம்பந்தமாக நடவடிக்கைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சரகத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையினருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை சைலேந்திரபாபு வழங்கினார்.
சைலேந்திரபாபு நெல்லை சரக காவல் உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு பற்றி ஆய்வு இந்த ஆய்வுக் கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபு, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புலன் விசாரணை, நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை ஆய்வுசெய்து அந்த வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை பெற நடவடிக்கை எடுக்கவும், மிக முக்கிய, கொடும் குற்றங்களில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளையும் பிடியாணை நிலுவையிலுள்ள எதிரிகளையும் விரைந்து கைதுசெய்யவும் அறிவுறுத்தினார்.
சைலேந்திரபாபு நெல்லை சரக காவல் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு பற்றி ஆய்வு மேலும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்களை ஆய்வுசெய்து நிலுவையிலுள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கவும் உத்தரவிட்டார். குற்றச் செயல்கள் அதிகமாக இடம்பெறும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவித் தகுந்த நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்.
நெல்லை சரகத்தில் உள்ள நெல்லை மாநகரம், நெல்லை புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களைச் சார்ந்த தனிப்படை குழுவினருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியின் அடுத்த மேயர் யார்? ஸ்டாலினின் தேர்வு இவரா?