தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்ப தகராறு: மகள்களை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை!

தேனி: ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தில் குடும்ப தகராறு காரணமாக இரண்டு மகள்களுக்கு அரளி விதைகளை அரைத்து கொடுத்து விட்டு தாயும் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

குடும்ப தகராறு: மகள்களை கொலை செய்த தாய் தற்கொலை!
family problem

By

Published : Oct 23, 2020, 11:42 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேவுள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சுரேஷ்குமார் - செண்பகவள்ளி (29). சுரேஷ்குமார் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

தம்பதிக்கிடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (அக்.23) பிற்பகல் கணவர், மகன் வீட்டில் இல்லாத நேரத்தில், தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்த செண்பகவள்ளி, அரளி விதைகளை அரைத்து குடித்து அதனை தனது இரண்டு மகள்களுக்கும் கொடுத்துள்ளார்.

இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்கள் மூவரையும் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், செண்பகவள்ளி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து செண்பகவள்ளியின் தந்தை முனியாண்டி, கானா விலக்கு காவல் நிலையத்தில் தனது மகள் 2 வருடங்களாக தீராத வயிற்று வலியில் அவதிப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்ததாகவும். அதனால் வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும், தான் இறந்த பிறகு மகள்களை யார் பராமரிப்பார் என குழந்தைகளுக்கும் அரளி விதைகளை அரைத்து கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details