தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெண் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றபோது அரசுப்பேருந்து மோதியது. இதில் கைலாசபட்டியைச் சேர்ந்த நாகஜோதி(38) என்ற பெண் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் மீது மோதிய பேருந்து - பொதுமக்கள் சாலை மறியல்!
தேனி: பெரியகுளம் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது அரசுப்பேருந்து மோதியதை அடுத்து, அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே அப்பகுதியில் தொடர்ந்து விபத்து நிகழ்வதாகக்கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி மாவட்ட காவல் கண்காணிபாளர் பாஸ்கரன், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மேலும் இந்த விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை மறியலால் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.