தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாளர் பொதுப்பெயரில் மாற்று சமுதாயத்தினரைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுவரொட்டி!

தேனி: பெரியகுளம் அருகே வேளாளர் பட்டியலில் மாற்று சமுதாயத்தினரைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக வேளாளர் உறவின் முறையினர் கிராமங்கள்தோறும் சுவரொட்டி, பேனர்கள் வைத்துள்ளனர்.

By

Published : Jan 9, 2021, 10:21 PM IST

poster
poster

தமிழ்நாட்டில் பட்டியில் இனத்தில் உள்ள குறிப்பிட்ட 7 உள்பிரிவுகளைச் சேர்ந்த சமுதாயத்தினரை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சேர்த்திட வேண்டும் என அச்சமுதாய மக்களின் கோரிக்கையை ஏற்ற அரசு மத்திய அரசுக்கு அதற்கான பரிந்துரையை அனுப்பியுள்ளது.

இந்நிலையில் வேளாளர் என்ற பெயரில் மாற்று சமுதாயத்தினரையும் இணைப்பதற்கு தேனி மாவட்டத்தில் உள்ள வேளாளர் சமுதாயத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

இதன் எதிரொலியாக பெரியகுளம் அருகே உள்ள கிராமங்களில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக வேளாளர் சமுதாயத்தினர் பேனர்கள், சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டில் சுமார் இரண்டு கோடி பேர் உள்ள வேளாளர் சமுதாயத்தினரை ஆதரிப்பவர்களுக்கே எங்களது ஓட்டு! எதிர்ப்பவர்க்கில்லை எங்கள் வாக்கு! என்ற வாசகங்கள் அதில் அச்சிடப்பட்டுள்ளன.

வடுகபட்டி, சில்வார்பட்டி, அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இந்தச் சுவரொட்டிகளை வேளாளர் மக்கள் வைத்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: இறந்தவரின் உடலை தெப்பக்கட்டை மூலம் ஆற்றைக் கடந்து கொண்டுவந்த உறவினர்கள்

ABOUT THE AUTHOR

...view details