தேனி மாவட்டம் லோயர்கேம்ப் அருகே கழுதைமேடுபுலம் பகுதியில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு சொந்தமான இயற்கை வேளாண்மை முறையில் பயிரிடப்படும் தோட்டம் ஒன்று உள்ளது. இதில் பல்வேறு வகை மூலிகைச் செடிகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகின்றன. மேலும் சந்தன மரங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன.
சந்தன மரம் வெட்டிய இருவர் கைது!
தேனி: லோயர் கேம்ப்பில் உள்ள தனியார் தோட்டத்தில் சந்தன மரங்கள் வெட்டிய இருவரை, காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜூலை 14ஆம் தேதி சுமார் மூன்றுக்கும் மேற்பட்ட சந்தன மரங்களை மர்ம நபர்கள் சிலர் வெட்டிச் சென்றுள்ளனர். இதனையடுத்து இதன் நிர்வாகத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். தற்போது, இவ்வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி பொருள்கள் வைப்பறையில் இருந்த சுமார் 2லட்சம் மதிப்பிலான மரம் வெட்டும் இயந்திரங்கள் நான்கு திருடு போனது.
இந்நிலையில், விசாரணையை துரிதப்படுத்திய குமுளி காவல்நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார், இதுதொடர்பாக கூடலுரைச் சேர்ந்த சரத்குமார் (எ) பசுபதி (24) மற்றும் விஜி (36) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வெட்டப்பட்ட சந்தன மரக்கட்டைகள் மற்றும் மரம் வெட்டும் இயந்திரம் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.