தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதியான குமுளி மலைப்பாதையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. நேற்று கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் இருந்து நாமக்கல்லைச் சேர்ந்த ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் (51) லாரியில் தேனி மாவட்டத்திற்கு பாசிப்பருப்பு ஏற்றிச்சென்றுள்ளார்.
லாரியானது குமுளி மலைச்சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் லாரி திரும்ப முடியாமல் சாலையின் வலது பக்கம் உள்ள பள்ளத்தில் இறங்கியது. கட்டுப்பாட்டை இழந்த லாரியை ஓட்டுநர் உடனடியாக நிறுத்தியதால் நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.