தேனி:பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நீர்வரத்து குறைந்ததைத் தொடர்ந்து, இன்று (செப்.15) அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக, அருவியின் நீர்பிடிப்புப்பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி பகுதிகளில் கடந்த மாத இறுதியில் பெய்த கனமழையின் காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடந்த 31ஆம் தேதி முதல் கும்பக்கரை அருவியில், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிப்பதாக வனத்துறை அறிவித்தனர்.