தேனி: பண்ணைபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் மகள் நிகிதா ஸ்ரீ (7) மற்றும் கரியம்பட்டி ஜெகதீசன் மகள் சுபஸ்ரீ (6) இருவரும் பாவலர் தெருவில் உள்ள அரசு பொதுக் கழிப்பறை தொட்டியின் மேல் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, தொட்டியின் மேல் மூடி வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் அட்டை உடைந்து இரண்டு குழந்தைகளும் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்தனர்.
இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் 2 குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனைக்கு புறப்பட்டனர். ஆனால் நிகிதா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுபஸ்ரீயை உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.