தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணக்கில் வராத பணம் குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் கேள்வி

தேனி: உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத 82 ஆயிரத்து 410 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கணக்கில் வராத பணம் குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் கேள்வி

By

Published : Oct 24, 2019, 7:10 AM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் அவ்வப்போது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரசு அலுவலங்கள் தீபாவளி பண்டிகைக்காக பரிசுப் பொருட்கள், பணம் உள்ளிட்டவை வாங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி தலைமையிலான காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும் இந்த சோதனையில் அலுவலகத்தில் உள்ள கோப்புகள் உள்ளிட்டவைகள் சரியாக உள்ளதா என்று ஆய்வும் மேற்கொண்டனர்.

சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 82 ஆயிரத்து 410 ரூபாய்யை லஞ்ச ஒழிப்புதுறை அலுவலர்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமாரிடம் தீவிரவிசாரணை மேற்கொண்டனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details