தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அக்பர், வழக்கம்போல் இன்று பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அக்பருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதுள்ளது. இதனையடுத்து அருகிலிருந்த சக ஆட்டோ ஓட்டுநர்கள் அக்பரை பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் அக்பர் மருத்துவமனையிலையே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் இல்லாததாலே ஆட்டோ ஓட்டுநர் அக்பர் உயரிழந்ததாகக் கூறி சக ஆட்டோ ஓட்டுநர்கள், இறந்தவரின் உறவினர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி காவல் துணை கண்காணிபாளர் முத்துக்குமார், உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநரின் உறவினர்கள், ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இல்லாத மருத்துவர் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
அவசர சிகிச்சை பிரிவில் மருத்தவர்கள் இல்லாததைக் கண்டித்து உறவினர்கள் முற்றுகை! பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 37 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில், ஏழு மருத்துவர்களே உள்ளதாகவும், மருத்துவர்கள் பற்றாக்குறையால் இதுபோன்று ஆபத்தான நேரங்களில் சிகிச்சை குறைவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க...ஈ டிவி பாரத் செய்தி எதிரொலி: கருணை இல்லத்துக்கு கிடைத்த அரசின் கருணை!