தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: ஓபிஎஸ் தொடங்கிவைத்தார்!

தேனி: கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.

தேனி
தேனி

By

Published : Jan 31, 2021, 12:52 PM IST

'இளம்பிள்ளை வாதம்' எனப்படும் போலியோ நோயினை ஒழிப்பதற்கான போலியோ சொட்டு மருந்து முகாம், இன்று (ஜன.31) நாடு முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது.

அதன்படி, தேனி மாவட்டத்தில் 830 மையங்களில் 1,02,000 குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முகாம் நடைபெறுவதை மேற்பார்வையிடுவதற்காக வட்டார அளவில் 104 நபர்களும், மாவட்ட அளவில் 14 நபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கி தொடங்கிவைத்தார்.

தேனியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

இந்த முகாமில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், கம்பம் எம்.எல்.ஏ.ஜக்கையன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

ABOUT THE AUTHOR

...view details