தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று கட்சியினரைச் சந்தித்தார்.
சென்னை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நேற்று காலை முதல் வந்திருந்த அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் துணை முதலமைச்சரை சந்தித்துப் பேசினார். அவருடன் உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி, சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம், மதுரை தெற்குத் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ். சரவணன், மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் ஆகியோரும் சந்தித்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், "மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அருகில் மூக்கையா தேவரின் சிலை நிறுவ வேண்டும் என்ற தென் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அரசு சிலை நிறுவுவதற்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது.