தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரம் மாணவன் துப்பாக்கிச்சூடு: முக்கிய குற்றவாளி தேனி நீதிமன்றத்தில் சரண்!

தேனி: காஞ்சிபுரம் பாலிடெக்னிக் மாணவன் துப்பாக்கிச்சூட்டு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தேனி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

kanchipuram student shooting case

By

Published : Nov 11, 2019, 7:24 PM IST

சென்னையை அடுத்த வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் பஜனைகோயில் தெரு பகுதியில் கடந்த 5ஆம் தேதியன்று பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் முகேஷ்குமார் என்பவரை அவரது நண்பர் விஜய் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு கொலைசெய்து விட்டு தலைமறைவாகி விட்டார்.

தப்பியோடிய குற்றவாளி விஜயை காவலர்கள் தேடிவந்த நிலையில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரவுடி செல்வம் இன்று தேனி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் சரணடைந்த ரவுடி செல்வத்தை வரும் நவம்பர் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ரவுடி செல்வம் தேனி நீதிமன்றத்தில் சரண்

இதனைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் ரவுடி செல்வத்தை தேக்கம் பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறையில் அடைப்பதற்காக காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா வியாபாரிகள் மூன்று பேர் கைது; போலீஸ் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details