தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கோதாவரி தண்ணீரை கொண்டுவர பக்கபலமாக இருப்பேன்' - தமிழிசை சௌந்தரராஜன்

தேனி: தமிழ்நாட்டுக்கு கோதாவரி தண்ணீரை கொண்டுவர அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பேன் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உறுதியளித்தார்.

tamilisai-soundararajan
tamilisai-soundararajan

By

Published : Mar 11, 2020, 10:32 AM IST

தேனி வடபுதுப்பட்டியில் தனியார் கல்விக் குழுமம் ஒன்றின் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறக்கும் நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "வாய்ப்புகள் கிடைக்கும் போது அவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் துணிச்சல், மகிழ்ச்சி, தன்னம்பிக்கை அத்துடன் நேர்மையிருந்தால் வாய்ப்புகள் தேடி வரும்.

எல்லாப் பெண்களைப் போல நானும் ஒரு சாதாரணப் பெண்மணிதான். ஆனால் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையை அசாதாரணமாக செய்து முடிக்கும் துணிச்சல் இருக்கிறது. அது மட்டுமே என்னை ஆளுநராக உயரத்தியது எனக் கருதுகிறேன். என்னைப்போல் மாணவிகள் ஆளுநராக, மருத்துவராக, பொறியாளராக வர வேண்டும். பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாது என யாரும் சொல்லவில்லை", என்றார்.

விழாவில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்

தொடர்ந்து பேசிய அவர், கோதாவரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரயிருக்கிறது. அதற்கான முயற்சிகளை தமிழ்நாடு, தெலங்கானா அரசுகள் முயற்சி எடுத்து வருகின்றன. அதற்கு பக்கபலமாக நான் இருப்பேன். அதுகுறித்து தமிழ்நாடு அமைச்சர்களுக்கு முன்பாகவே தெலங்கானா முதலமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:தெலங்கானா ஆளுநர் தமிழிசை திண்டுக்கல் வருகை!

ABOUT THE AUTHOR

...view details