தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டுயானை தாக்கி விவசாயி பலி! பொதுமக்கள் பீதி

தேனி: காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலியானதால் அரசரடி கிராம மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

பலியான விவசாயி மாயி

By

Published : Feb 12, 2019, 2:13 PM IST

தேனி மாவட்டம், வருசநாடு வனச்சரகத்திற்கு உட்பட்ட அரசரடி கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுற்றிலும் மலைகளால் சூழ்ந்த இந்த எழில் மிகு கிராமத்தில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.

இந்த நிலையில், அரசடியை சேர்ந்த மாயி( 58) என்ற விவசாயி தனது தோட்டத்தில் பயிரிட்டு இருந்த அவரைச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை ஒன்று, மாயியை விரட்டி தாக்கியது. தப்பி ஓட முயன்றவரை துதிக்கையால் மடக்கிபிடித்து தனது காலால் ஏறிமிதித்தது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

பலியான விவசாயி மாயி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற, வருசநாடு வனச்சரக அதிகாரிகள் மற்றும் மயிலாடும்பாறை காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டு யானை தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details