சட்டமேதை அம்பேத்கரின் 129ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உத்தரவிடப்பட்டது.
அதன்படி தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மாலை அணிவித்து மரியதை செலுத்தினார்.
முன்னதாக அங்கு வந்திருந்த விவசாயி ஒருவர் கரோனா நிவாரண நிதிக்கான கசோலையை ஆட்சியரிடம் வழங்கினார். தேனி அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் விவசாயப்பணிகள் மூலம் தான் சேமித்த தொகை ரூ.48 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கியிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.
தேனி ஆட்சியரை நெகிழவைத்த விவசாயி தலைவரின் சிலைக்கு மாலை அணிவிக்கவந்த இடத்தில் விவசாயி கரோனா நிவாரண நிதி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.