தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 6, 2020, 1:34 PM IST

ETV Bharat / state

முதலமைச்சர் வீட்டில் படுத்துக்கொண்டு போராடுவோம் - அய்யாக்கண்ணு

தேனி: டி.என்.டி. மக்களுக்கு உரிய சலுகை வழங்கவில்லை என்றால் முதலமைச்சர், துணை முதலமைச்சர் வீடுகளில் படுத்துக்கொண்டு போராடுவோம் என அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

அய்யாக்கண்ணு பேட்டி
அய்யாக்கண்ணு பேட்டி

சாதி சான்றிதழில் டி.என்.சி. என்று இருந்தை டி.என்.டி. என்று மாற்ற சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக போராடிவந்த நிலையில், 2019ஆம் ஆண்டு டி.என்.டி. சான்றை தமிழ்நாடு அரசு வழங்கியது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு ரோகிணி கமிஷன் ஒன்றை ஏற்படுத்தி டி.என்.டி.க்கான சலுகை, இடஒதுக்கீடு என்ன என்று அறிக்கை தாக்கல் செய்ய கோரியது. ஆனால் ரோகிணி கமிஷன் ஏற்கனவே மூன்று மாதங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் மேலும் மூன்று மாதங்கள் கேட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் சீர்மரபினர் சார்பில் ஓ.பி.சி.யில் ஒன்பது சதவீகிதம் இடஒதுக்கீடு வேண்டும், ரோகிணி கமிஷன் உடனே அறிக்கையை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோரிஇன்றுஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். அப்போது உத்தமபாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், இட ஒதுக்கிடு வழங்கக் கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் 50க்கும் மேற்பட்ட சீர்மரபினர் கலந்துகொண்டனர்.

அய்யாக்கண்ணு பேட்டி
இதனையடுத்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணுசெய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த டி.என்.டி. சான்று எங்கள் மக்களின் பல போராட்டங்களுக்கு பின் கிடைத்தது. ஆனால் கிடைத்தும் எந்த ஒரு பயனும் இல்லமால் உள்ளது. எங்களுக்கு ஓ.பி.சி. இட ஓடுக்கீட்டில் ஒன்பது சதவீதம் வழங்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் அடுத்த கட்ட போராட்டமாக சென்னையில் உள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சர் வீடுகளில் படுத்துக்கொண்டு போராடுவோம் என உறுதிப்படத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'இலவச மின்சாரத்தை ரத்து செய்யதால் போராட்டம் வெடிக்கும்' - விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details