தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான பரப்புரையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு மனிதனின் ஜனநாயகக் கடமையான வாக்குரிமையை செலுத்திட தேர்தல் ஆணையம் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
100 விழுக்காடு வாக்குப்பதிவு- மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி!
தேனி : தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவினை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து 100 விழுக்காடு வாக்கினை செலுத்திட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவ் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணியில் 'ஏப்ரல் 18 தேர்தல் நாள்' '100 விழுக்காடு வாக்கு இந்தியர்களின் பெருமை' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
இப்பேரணியானது கம்பம் - பெரியகுளம் சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வழியாக சென்று கான்வென்ட் பள்ளியில் நிறைவுபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.