நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்ட முதலாமாண்டு மாணவர் உதித் சூர்யாவையும், அவரது பெற்றோரையும் தேனி சிறப்பு தனிப்படை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, உதித் சூர்யா குடும்பத்தினர் சென்னையில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்காக தேனிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் தேனி சிபிசிஐடி காவல்துறையினர், கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் சிபிசிஐடி விசாரணை!
தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக விசாரணைக்காக மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
முதல்வர் ராஜேந்திரன்
இந்நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது தொடர்பான விசாரணைக்காக, தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், மாவட்டத் தலைநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் சிபிசிஜடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: நீட் தில்லாலங்கடி: தேனியைத் தொடர்ந்து கோவையிலும் ஆள்மாறாட்டம்?
TAGGED:
நீட் தேர்வு ஆள்மாறாட்டம்