தேனி மாவட்டம் போடி சாலை காளியம்மன் கோயில் அருகே அமைந்துள்ளது போடி நகராட்சி பாதாளச் சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம். மதுரை – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இவ்வளாகத்தின் வாயிற்கதவில் இளைஞர் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போடி காவல் துறையினர் சுத்திகரிப்பு நிலைய வளாக வாயில் கதவில் கட்டிவைத்து எரிக்கப்பட்டு கரிக்கட்டையாகக் கிடந்த உடலை மீட்டனர்.