தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் வனச்சரகத்திற்குள்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில் யானை, புலி, சிறுத்தை, கரடி, கருமந்தி, சிங்கவால்குரங்கு, காட்டுமாடு, மான், செந்நாய், வரையாடு உள்ளிட்ட பலவகை வனவிலங்குகள் உள்ளன.
இந்த வனப்பகுதி கேரள மாநில எல்லைப்பகுதியில் உள்ளதால் அடையாளம் தெரியாத நபர்கள் வேட்டையாடிவிட்டு தப்பிச்செல்வது வழக்கமாக இருந்துவருகிறது. இதனைத் தடுக்க கண்டமனூர் வனத் துறையினர் துப்பாக்கிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், கண்டமனூர் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனத் துறையினர் பீட் சன்னாசியப்பன் கோயில் அருகே ரோந்து செல்லும்போது துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது.