தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் ஓய்வு ஊதியம், 100 நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் கம்பம் - சுருளிப்பட்டி சாலையில் உள்ள தொட்டமாந்துறை என்ற இடத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக சலவைத் தொழிலாளர்கள் வழிபட்டு வரும் கோயில்களான நாகம்மாள் கோயில், கருப்பசாமி கோயில் உள்ளிட்ட கோயில்களின் இடங்களை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அந்த இடத்தை சலவைத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.