தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரதட்சணைக்காக மனைவியை எரித்துக்கொன்ற கணவருக்கு ஆயுள்

தேனி: ஆண்டிபட்டி அருகே வரதட்சணை பணம் வாங்கி வராததால் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரதட்சனைக்காக மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை  வழங்கி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
வரதட்சனைக்காக மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

By

Published : Feb 12, 2020, 7:51 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா குமணன்தொழுவைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பாண்டீஸ்வரி. இவர் 2017ஆம் ஆண்டு தனது மனைவி பாண்டீஸ்வரியிடம் சலூன் கடை வைக்க அவரது தந்தையிடம் சென்று வரதட்சணையாகப் பணம் வாங்கிவரக் கூறியுள்ளார்.

ஆனால் பணம் வாங்கிவர பாண்டீஸ்வரி மறுத்துள்ளார். பணம் வாங்கி வராத பாண்டீஸ்வரியை தினமும் துன்புறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டிவந்த குமார் ஒருநாள் திடீரென்று அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக்கலூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாண்டீஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த மயிலாடும்பாறை காவல் துறையினர் சிகிச்சையிலிருந்த பாண்டீஸ்வரியிடம் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் இறப்பதற்கு முன், வரதட்சணை பணம் வாங்கி வராததால் தனது கணவர்தான் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தாகக் கூறி மரண வாக்குமூலம் அளித்தார்.

வரதட்சனைக்காக மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இது தொடர்பான வழக்கு விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் வரதட்சணை பணம் வாங்கி வராததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொலைசெய்த குற்றத்திற்காகப் பாண்டீஸ்வரியின் கணவர் குமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதைக் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குற்றவாளி குமாரை மதுரை மத்திய சிறைக்கு தகுந்த பாதுகாப்புடன் காவல் துறையினர் அழைத்துச் சென்று சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க:

வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியவர் விமான நிலையத்தில் கைது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details