நீலகிரி:குன்னூர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் டபுள்ரோடு, ரன்னி மேடு வனப்பகுதிக்கு இரண்டு குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கடந்த டிச.16-ம் தேதி வருகை தந்தது. மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வருகை தந்த, இந்த யானைகள் உலிக்கல், சின்னக் கரும்பாலம், கிளண்டேல் போன்றப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தொடர்ந்து உலா வந்தன.
இவை ஊருக்குள் வந்து விடாமல், வன ஊழியர்கள் தகரங்களை தட்டி சப்தம் எழுப்பி வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். அவ்வப்போது வனப்பகுதிக்குள் சென்றாலும் தொடர்ந்து இவை குடியிருப்புகளுக்கு அருகில் வர முயற்சிப்பதால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.