தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடலூரில் சுற்றித்திரியும் புலி.. பீதியில் கிராம மக்கள்...

கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக புலி நடமாட்டம் இருப்பதால் மாலை நேரங்களில் வீடுகளில் இருந்து மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடலூரில் சுற்றித்திரியும் புலி.. பீதியில் கிராம மக்கள்!
கூடலூரில் சுற்றித்திரியும் புலி.. பீதியில் கிராம மக்கள்!

By

Published : Oct 12, 2022, 6:31 PM IST

நீலகிரி மாவட்டம்கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மண்ணுவயல், அம்பல மூல, சேமுண்டி, கொரவயல், போஸ்பரா உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக புலி நடமாட்டம் உள்ளதாக வனத்துறைக்கு விவசாயிகள் தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஒலிப்பெருக்கிகள் மூலம் புலி நடமாட்டம் குறித்து அறிவித்தனர்.

கூடலூரில் சுற்றித்திரியும் புலி.. பீதியில் கிராம மக்கள்!

அந்த அறிவிப்பில், புலி மற்றும் வன விலங்குகளின் நடமாட்டம் தென்படுவதால் மாலை நேரங்களில் யாரும் வீடுகளில் இருந்து யாரும் வெளியில் நடமாட வேண்டாம். கதவுகளை மூடி வைத்துக்கொள்ளுங்கள என்று தெரிவிக்கப்பட்டது. அதோடு வனத்துறை சார்பில் அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும், ஒலிப்பெருக்கிகளும் பொருத்துப்பட்டுள்ளன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "நாங்கள் அன்றாடம் கூலி வேலை பார்த்து வருகிறோம். வேலை முடித்து வீடு திரும்ப இரவு 9 மணி ஆகிவிடும். இப்போது நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை. எங்களை இரவு நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி வரும் வனத்துறையினர், வனத்துக்குள் இருந்து ஊருக்குள் புகுந்து வரும் வன மிருகங்களை தடுப்பதற்கான வழியை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:தூய்மைப்பணியாளர்களுக்கு உயர்தர உணவகத்தில் உணவளித்து மகிழ்ந்த குடியிருப்புநலச்சங்கத்தினர்

ABOUT THE AUTHOR

...view details