நீலகிரி: உதகை அருகேயுள்ளது போர்த்தியாடா கிராமம். இங்கிருந்து மேட்டுப்பாளையத்திற்கு கேரட் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி, கரும்பாலம் சேலாஸ் வழியாக பயணிக்கும்போது நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.
சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்த இந்த லாரியில் எல்லக்கண்டியைச் சேர்ந்த வேலுசாமி (54), போர்தியாடாவை சேர்ந்த கவின் (23), சூரிய குமார் (22), சசி (21), ஆகியோர் படுகாயமடைந்தனர். இது குறித்து குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.