தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையை சீரமைத்த போக்குவரத்து ஆய்வாளர்!

நீலகிரி: குன்னூர் அருகே விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் குண்டும், குழியுமாக இருந்த சாலையை போக்குவரத்து துறை ஆய்வாளர், ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்து தற்காலிகமாக சீரமைத்தனர்.

சாலையை சீரமைக்கும் போக்குவரத்து ஆய்வாளர்
சாலையை சீரமைக்கும் போக்குவரத்து ஆய்வாளர்

By

Published : Sep 21, 2020, 1:10 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவப் பகுதிக்குச் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக அண்மையில் குழி தோண்டப்பட்டது. அதனை, சரிவர மூடப்படாததால் அந்த சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது.

இது குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால், அங்கு பணியிலிருந்த போக்குவரத்துதுறை ஆய்வாளர் முரளி, அப்பகுதியிலிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் இணைந்து, பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த சாலையை தற்காலிகமாக சீரமைத்தனர்.

தொடர்ந்து, நகராட்சி அலுவலர்கள், போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தார் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டி கிராம மக்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details