தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரங்குகளை கூண்டுகள் வைத்து பிடிக்கக் கோரிக்கை!

நீலகிரி: சுற்றுலாத் தலங்களில் உள்ள குரங்குகளை கூண்டுகள் வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

By

Published : Nov 8, 2019, 10:44 PM IST

குரங்குகளை கூண்டுகள் வைத்து பிடிக்க கோரிக்கை!


நீலகிரி மாவட்டம் குன்னூர்ப் பகுதியில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் சிம்ஸ் பார்க், டால்பின் நோஸ் போன்ற பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் ஆகும். இப்பகுதிகளில் அதிக அளவில் குரங்குகள் நுழைந்து சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் பயணிகளின் கையில் உள்ள தின்பண்டங்களை பிடுங்கிச் செல்கிறது.

இதனால் அப்பகுதிக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இந்நிலையில், டால்பின் நோஸ் காட்சி முனையைப் பார்வையிட வந்த, வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் கையில் இருந்த, பணப்பையை குரங்குகள் பிடுங்கி பள்ளத்தாக்கில் வீசியது. பின்னர் இது குறித்து உடனடியாக சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு தரும் குரங்குகள்

இதையடுத்து வனத்துறையினர் 500 அடி பள்ளத்தில் விழுந்த பணப்பையை கடும் சிரமத்திற்குப் பின், எடுத்து சுற்றுலாப் பயணிகளிடம் ஒப்படைத்தனர்.

மேலும் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் சுற்றுலாத் தலங்களில் கூண்டுகள் வைத்து, குரங்குகளை பிடித்து, வனப்பகுதியில் விட வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்க:

தாகம் தீர்க்க குடிநீரின்றி 15 குரங்குகள் உயிரிழந்த சோகம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details