நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக சுற்றுலாத் தொழில் உள்ளது. இதனை நம்பி, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக சுமார் 175 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களும் மூடப்பட்டன. இதனால், இதனை நம்பி உள்ள அனைத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.
நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தளங்கள் திறப்பு!
நீலகிரி: 175 நாள்களுக்கு பிறகு நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களும் திறக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசானது பூங்காக்களை மட்டும் திறக்க உத்தரவிட்ட நிலையில், மாவட்ட நிர்வாகமும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற்று வரலாம் என அறிவுறுத்தியது. எனவே குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகிய அனைத்தும் 175 நாட்களுக்கு பிறகு இன்று (செப்.09) திறக்கப்பட்டன்.
பூங்காக்கள் திறக்கப்பட்ட முதல் நாளான இன்று (செப்டம்பர் 9) வெளியூர், உள்ளூர் மக்களின் கூட்டமானது குறைவாக காணப்பட்டது. மேலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனிங் மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிவதோடு, தகுந்த இடைவெளியையும் கட்டாயம் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.