தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிகளை மீறும் ஆட்டோக்கள்: ஆட்சியரிடம் மனு அளித்த சுற்றுலா வாகன ஓட்டுநர்கள்!

நீலகிரி: கரோனா காலக்கட்டத்தில் உரிய அனுமதியின்றி அதிக தூரத்திற்கு இயங்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

By

Published : Apr 26, 2021, 6:05 PM IST

ஆட்சியர் மனு அளித்த சுற்றுலா வாகன ஓட்டுநர்கள்
ஆட்சியர் மனு அளித்த சுற்றுலா வாகன ஓட்டுநர்கள்

மலை மாவட்டமான நீலகிரியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் சுற்றுலாப் பயணிகளின் வருகையை நம்பி உள்ளனர்.

கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா வாகன ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இன்று 200க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், `ஆட்டோக்கள் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அனுமதியின்றி 30 கிலோ மீட்டருக்கு மேல் ஆட்டோக்கள் இயக்குவதால் தாங்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளோம்.

ஆட்சியர் மனு அளித்த சுற்றுலா வாகன ஓட்டுநர்கள்

எனவே உரிய அனுமதி பெற்ற தூரத்திற்கு மட்டுமே ஆட்டோவை இயக்க அனுமதிக்க வேண்டும். விதியை மீறி இயங்கும் ஆட்டோக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமன்றி உதகையில் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு விடுவதற்குத் தடை விதிக்க வேண்டும்.

மேலும், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் தங்களின் வாகன ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்போம் ` என குறிப்பிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details