நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, குஞ்சப்பணை குன்னூரில் பர்லியார், மரப்பாலம், காட்டேரி, எல்லநள்ளி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வருகின்றனர். தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சமவெளி பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளிடம் பணத்தை பறிமுதல் செய்யும் தேர்தல் அலுவலர்கள்
நீலகிரி : மக்களவைத் தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் பறக்கும் படையினர் சோதனை என்ற பெயரில் பணத்தை பறிமுதல் செய்துவருவது சுற்றுலாப் பயணிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணத்தை பறிமுதல் செய்யும் தேர்தல் அதிகாரிகள்
இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் தேர்தலையொட்டி வாகன சோதனையில் ஈடுபடும் பறக்கும் படையினர் அவர்களிடம் இருக்கும் பணத்தை உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி பறிமுதல் செய்துவருகின்றனர். இதனால் அவர்கள் செய்வது அறியாது தவித்துவருகின்றனர்.
மேலும், அரசியல்வாதிகளின் வாகனங்களை சோதனை செய்யாமல், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை மட்டுமே சோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்வதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.