தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரி அருகே 4 மணி நேரமாக வெளுத்துவாங்கிய மழை!

நீலகிரி: கூடலுாரைச் சுற்றியுள்ள தேவாலா, பந்தலுார் போன்ற பகுதிகளில் நான்கு மணி நேரமாக பரவலாக கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி

By

Published : Jun 22, 2019, 6:09 PM IST

தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், தற்போது சில பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இதனால், குடிநீர் தேவையை மக்களால் சிறிதளவு சமாளிக்க முடிகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனிடையே இன்று மதியம் முதல் கூடலூர், தேவாலா, பந்தலூர் போன்ற பகுதிகளில் பரவலாக கனமழை பெய்துவருகிறது.

கூடலூரில் 4 மணி நேரமாக கனமழை

இடைவிடாது காற்று இல்லாத மழை பெய்து வருவதால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details