தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள கரடிகள்; பொதுமக்கள் அவதி!

ஊட்டி: குன்னூர் கரோலினா எஸ்டேட்டில் மூன்று நாட்களாக கரடிகள் அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

By

Published : Jul 8, 2019, 9:11 AM IST

குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள கரடிகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கரோலினா எஸ்டேட்டானது அடர்ந்த வனப்பகுதியையும் தேயிலை தோட்டங்களையும் கொண்டது. அங்குள்ள குடியிருப்பு பகுதியில் பழங்கள் நிறைந்த மரங்கள் அதிகமாக உள்ளதால் வனப்பகுதியில் உள்ள கரடிகள் அடிக்கடி அக்குடியிருப்பு பகுதிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் அங்கு வந்த கரடிகள் அங்கேயே முகாமிட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமலும், தேயிலைத் தோட்டத்திற்கு பெண்கள் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள கரடிகள் அவதியில் பொதுமக்கள்

மேலும், இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த சில மாதங்களில் கரடி கடித்து இருவர் உயிரிழந்த நிலையில் தற்போது வனத்துறையினர் மெத்தனமாக இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details