தமிழ்நாடு

tamil nadu

கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் உள்பட மூவர் உயிரிழப்பு...சோகத்தில் மூழ்கிய கிராமம்!

By

Published : Aug 26, 2020, 2:56 PM IST

நீலகிரி: வனத்துறையினருக்கு சொந்தமான கிணற்றில் இளம் பெண் உள்பட மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தோர்
உயிரிழந்தோர்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள தேவாலா, வடமூலை பகுதியை சேர்ந்தவர் சுந்தரலிங்கம்.

இவரது மகள் சுகன்யா (22) நேற்று (ஆக்.25) மாலை மூன்று மணி அளவில் வீட்டின் அருகே உள்ள வனப்பகுதிக்கு விறகு எடுக்க சென்றுள்ளார்.

அப்போது வனப்பகுதியில் உள்ள பயன்பாடற்ற சுமார் 100 அடி ஆழக் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.

சுகன்யாவின் அலறல் சத்தம் கேட்ட அவரது அண்ணன் தமிழழகன் மற்றும் உறவினர் முரளிதரன் ஆகிய இருவரும் கிணற்றுக்குள் குதித்து சுகன்யாவை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் 3 பேரும் கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டனர்.

இச்சம்பவம் அறிந்த காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து கிணற்றுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூன்று பேரின் உடல்களும் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. அதன் பின்னர் அவர்களது உடல்களை உடற்கூறாய்வுக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:கார் பரிசு விழுந்துள்ளதாகக் கூறி நூதன மோசடி - ஆன்லைனில் பொருள் வாங்கும் போது உஷார்...!

ABOUT THE AUTHOR

...view details