தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பூசிக்கு முக்கியத்துவம் - கால்நடைகளை மறந்த அரசு!

நீலகிரியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் அதிதீவிரமாகப் பரவி வருவதால் மாடுகள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

syphilis-in-nilgiri-cows
syphilis-in-nilgiri-cows

By

Published : Jun 12, 2021, 9:47 AM IST

நீலகிரி: கால்நடைகளுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை அரசு அளிக்கத் தவறியதால் அதிதீவிரமாக கோமாரி நோய் பரவி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், ஆண்டிற்கு இருமுறை கால்நடைகளுக்குப் போட வேண்டிய தடுப்பூசிகள் தற்போது போடப்படாமல் விடப்பட்டுள்ளன.

கரோனாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் கால்நடைகளுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை அரசு அளிக்கத் தவறியதால், நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வேகமாகப் பரவி வருகிறது.

இவை அருகில் உள்ள மற்ற கால்நடைகளுக்கும் பரவி வருவதால், பால் உற்பத்தி வெகுவாக குறைந்து வருகிறது. இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்.

கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவும் அபாயம்
குன்னூர் அருகே இளித்தொரை கிராமம் உட்பட கிராமங்களில் கோமாரி நோய் அதிதீவிரமாகப் பரவி வருகிறது. இங்கு போதிய கால்நடை மருத்துவர்கள் இல்லாததால் கால்நடை பரிசோதனை மையமும் செயல்படாமல் உள்ளது.
இதனால் கால்நடைகள் இறந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details