தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூர் கோயிலுக்குள் புகுந்த வனவிலங்குகள் - பொதுமக்கள் அச்சம்

நீலகிரி: குன்னூர் டைகர் ஹில் விஜயநகர பேலஸ் பகுதியில், புதர்கள் சூழ்ந்த கோயிலினுள் வனவிலங்குகள் தஞ்சமடைந்துள்ளன.

குன்னூர் கோயிலுக்குள் புகுந்த வனவிலங்குகள்
குன்னூர் கோயிலுக்குள் புகுந்த வனவிலங்குகள்

By

Published : Feb 1, 2020, 8:33 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் டைகர் ஹில் பகுதியில் உள்ளது விஜயநகர பேலஸ். இங்கு இருந்த மக்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு, வண்டிச்சோலைக்கு இடம் மாற்றப்பட்டனர். இதன் பிறகு விஜயநகர பேலஸ் பகுதியில், இருந்த கோயில் சிலைகள் அம்மன் நகருக்கு கொண்டு சென்று, கோயில் அமைக்கப்பட்டது.

அதன்பிறகு விஜயநகரப் பகுதியில் பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டதால், முட்புதர்கள், செடிகள் முளைத்துள்ளது. இதனால் காட்டுமாடு, கரடி, சிறுத்தை உள்பட பல வனவிலங்குகள் தஞ்சமடைந்துள்ளன. இதனால் இங்குள்ள சிறுத்தைகள், அருகில் உள்ள டைகர் ஹில் குடியிருப்புகளுக்கு வந்து வீடுகளில் வளர்க்கும் நாய்களைப் பிடித்துச் செல்கிறது.

கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து செல்வதால் மக்கள் நடமாட அஞ்சுகின்றனர். எனவே, வனவிலங்குகள் குடிருப்புகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூர் கோயிலுக்குள் புகுந்த வனவிலங்குகள்

இதையும் படிங்க:ரேஷன் கடைக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் கரடி - ஊழியர்கள் பீதி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details