நீலகிரி மாவட்டம், குன்னுாரில் 'ஜெகரண்டா' மலர்கள் பூத்துக் குலுங்கி சுற்றுலாப் பயணிகளை வரவேற்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், நீலகிரிக்கு வந்த ஆங்கிலேயர்கள் வெளிநாட்டு மரங்களான, 'ஜெகரண்டா, பிளேம் ஆப் பாரஸ்ட், யூகலிப்டஸ்' உள்ளிட்ட ஏராளமான வகை மரங்களை இங்கு நடவு செய்தனர்.
இந்த வரிசையில் வளர்க்கப்பட்ட 'ஜெகரண்டா' மரங்களில், நீல நிற மலர்கள் கோடையில் மலர்வது வழக்கம். தற்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரும் சாலைகளின் இருபுறங்களிலும் நீல நிறங்களில் ஜெகரண்டா மலர்கள் பூத்து சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக உள்ளது.