தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டிய சமத்துவ பொங்கல்

நீலகிரி: உதகை அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாடினர்.

pongal celebration
pongal celebration

By

Published : Jan 10, 2020, 12:08 AM IST

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 15ஆம் தேதி தொடங்குகிறது. தமிழர்களின் முக்கியப் பண்டிகை என்பதால் அதற்கான கொண்டாட்டங்கள் தற்போது முதலே களைகட்டத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், உதகை அரசு கலை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

புதுப் பானையில் பொங்கல் வைத்து உற்சாகமாக ’பொங்கலோ பொங்கல்’ என்று சத்தமிட்டு மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் சமத்துவ பொங்கலை கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உரி அடித்தல் நிகழ்ச்சியில் மாணவர்கள், பேராசிரியர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டிய சமத்துவ பொங்கல்

கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதுமட்டுமின்றி மாணவிகளுக்கு இடையே கோலப் போட்டியும் நடைபெற்றது. இதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இதையும் படிங்க: கரூரில் பொங்கலுக்கு மண்பானை செய்யும் பணி தீவிரம்...!

ABOUT THE AUTHOR

...view details