தமிழ்நாடு

tamil nadu

குன்னூரில் காட்டுப்பன்றி தாக்கி ஒருவர் காயம்!

By

Published : Feb 27, 2021, 9:02 PM IST

நீலகிரி: குன்னூர் அருகே காட்டுப்பன்றி தாக்கி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

one-person-was-injured-in-a-wild-boar-attack-in-coonoor
one-person-was-injured-in-a-wild-boar-attack-in-coonoor

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேவுள்ள சிங்கார தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வாசு (48). இவர் வீட்டின் அருகேவுள்ள தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த காட்டுப்பன்றி திடீரென வாசுவைத் தாக்கியுள்ளது.

இதில் தலை, காலில் காயமடைந்த வாசு குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக குன்னூர் வனத்துறையினர் விசாரணை செய்து, வாசுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது காட்டுப் பன்றியும் மனிதர்களை தாக்கி வருவது அதிகரித்து வருகிறது. எனவே மனித - விலங்கு மோதலை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தரப்பில் பதிலளிக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details