நீலகிரி:வெலிங்டனில் இன்று (நவ.01) தேசிய அளவிலான மலையேற்றப் பயணத்தில் பங்கேற்றுள்ள தேசிய மாணவர் படை மாணவிகளிடையே உரையாற்றிய ககன்யான் திட்டத்தின தேசிய ஆலோசகரும், இந்தியாவின் முதலாவது விண்வெளி வீரருமான ராகேஷ் ஷர்மா பேசுகையில், தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பல தரப்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும், அதை உரிய முறையில் பயன்படுத்தி நாட்டிற்குத் தேவைப்படும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய அவர், விண்வெளி துறையில் பல்வேறு சவால்களுக்கிடையே தொழில்நுட்பம் மறுக்கப்பட்ட ஆட்சிக் காலத்திலும் இந்தியா இந்த அளவுக்கு நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், அதற்காகத் தாம் பெருமைப்படுவதாகவும் கூறினார்.