நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சியில் நகர்ப்புற திட்ட அலுவலராக பணிபுரிந்து வந்தவர் அறிவுடைநம்பி. இவர் கடந்த 30ஆம் தேதி அதேப் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை நகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது. இதற்கு அறிவுடைநம்பி கையூட்டு பெற்று கொண்டு சீல் வைக்கப்பட்ட கட்டடத்தை திறக்க அனுமதி வழங்கியுள்ளார். இதையறிந்த பொறுப்பு நகராட்சி ஆணையாளர் நாராயணன் நகர்ப்புற திட்ட அலுவலர் அறிவுடைநம்பியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நகர்ப்புற திட்ட அலுவலர் அறிவுடைநம்பி, மது போதையில் சமூக வலைத்தளங்களில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் நாராயணசாமி ஆகிய இருவரையும் மிரட்டும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.