கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நெடுகல்கொம்பையில் பழங்குடியினர் வசிக்கும் கிராமத்திற்கு சென்ற டேனிஸ் கிருஷ்ணா என்பவர் அரசுக்கு எதிராக கூட்டம் கூட்டி மக்களிடம் பேசியுள்ளார். மேலும், அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியது தொடர்பாக அவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டது.
இந்தச் சூழலில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை விசாரிக்க மவோயிஸ்ட் டேனிஸ் கிருஷ்ணாவை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரி இன்று உதகையில் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இவ்வழக்கை விசாரித்த உதகை அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை, குற்றம்சாட்டபட்ட டேனிஸ் கிருஷ்ணாவை கொலகொம்பை காவல் துறையினர் கைது செய்து, செப்டம்பர் 12ஆம் தேதிவரை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.
இந்துத்துவா கார்ப்பரேட் ஒழிக என கோஷமிட்ட டேனிஸ் கிருஷ்ணா இந்நிலையில், மூன்று நாட்கள் காவல் துறையின் காவலில் எடுத்து விசாரணை செய்ய கொலகொம்பை காவல் துறையினர் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இதனையடுத்து நீதிமன்ற வளாகத்திற்குள் டேனிஸ் கிருஷ்ணா மாவேயிசம் ஜிந்தாபாத், ஆசாத் காஷ்மீர் ஜிந்தாபாத், இந்துத்துவ கார்ப்பரேட்டுக்கு எதிராக போராடுக, தொழிலாளர்களே போராடுக என கோஷம் ஏழுப்பியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.