தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 28, 2020, 11:17 AM IST

ETV Bharat / state

சிசிடிவி காட்சியில் பதிவான சிறுத்தைகள் - அச்சத்தில் பொதுமக்கள்

நீலகிரி: சிசிடிவி காட்சியில் பதிவான சிறுத்தையின் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Leopard Walk in Coonoor Area
Leopard Walk in Coonoor Area

குன்னூர் நகரப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதில் காட்டெருமை, கரடி, புலி, யானை போன்ற வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும், சமீபத்தில் சிறுத்தை ஒன்று குடியிருப்புப் பகுதியில் புகுந்து வளர்ப்பு நாய்களை வேட்டையாடி சென்றது குறிப்பிடத்தக்கது. ராணுவ அலுவலர்கள் குடியிருப்பு, ராணுவ பள்ளி அருகே உள்ள கேட்டில் சிறுத்தை வருவது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து, ராணுவ அலுவலர்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்ததின் பேரில் வனக்காவலர் ராஜ்குமார் தலைமையில் அதிவிரைவு வேட்டைப் பிரிவு காவலர்களுடன் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

சிசிடிவி காட்சியில் பதிவான சிறுத்தைகள்

மேலும், சிறுத்தையைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு விட வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 2 சிறுத்தைகள் அதே இடத்தில் சாலையைக் கடப்பது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இதையும் படிங்க: குடியிருப்புப் பகுதிக்குள் மூன்று கரடிகள் - பொதுமக்கள் அச்சம்

ABOUT THE AUTHOR

...view details