தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோத்தகிரி பேரூராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன!

நீலகிரி: கோத்தகிரி பேரூராட்சியில் ரைபிள் ரேன்ஷ் என்ற பகுதியில் 1000 மரக்கன்றுகள் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் தலைமையில் நடப்பட்டன.

By

Published : Aug 18, 2019, 8:24 AM IST

1000 மரக்கன்றுகள் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் தலைமையில்   நடப்பட்டது

கோத்தகிரி பேரூராட்சி சார்பாக 1000 மரக்கன்றுகள் நீலகிரி மாவட்டம் ரைபிள் ரேன்ஷ் என்ற பகுதியில் பேருராட்சியின் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் தலைமையில் நடப்பட்டன. இதில் வட்டாட்சியர், நுகர்வோர் அமைப்புகள், பேரூராட்சி பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் இணைந்து பேரூராட்சிக்குச் சொந்தமான பல இடங்களில் மரக்கன்றுகளை நட்டனர்.

கோத்தகிரி பேருராட்சியில் ரைபிள் ரேன்ஷ் என்ற பகுதியில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன

உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் பேசுகையில், மரங்களே நம் எதிர்கால வாழ்க்கையின் உயிர்நாடி மாணவ மாணவிகள் மரம் வளர்ப்பதில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும். மேலும் மரங்கள் அதிக அளவில் வளர்ப்பதினால் அதிக அளவில் மழையைப் பெறமுடியும் என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details